நெட்பிளிக்ஸில் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ள தமிழ் படங்கள் என்னென்ன? வெளியானது அசத்தல் லிஸ்ட்.!
திரையில் ஆபாசமாக நடித்துவிட்டு மற்ற பெண்களுக்கு அறிவுரை கூறுகிறீர்களா? கங்கனா ரனாவத்தை கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.?
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கணா ரணாவத். இவர் இந்தியில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார். மேலும் சர்ச்சைக்கு பெயர் போன நடிகையாக இருக்கிறார்.
கங்கனா ரனாவத் தொடர்ந்து ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை மட்டுமே பதிவிட்டு வருவார். இதனால் சில காலமாக ட்விட்டரில் தடை செய்யப்பட்டிருந்தார். தடை நீக்கப்பட்ட பின் மீண்டும் தனது சர்ச்சையை கிளப்பும் வேலையை ஆரம்பித்து விட்டார்.
இதுபோன்ற நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை குறித்து சர்ச்சையான கருத்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது கோயிலுக்குள் ஒரு பெண் அரைகுறை ஆடை அணிந்து சென்ற படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இப்புகைப்படத்தில் கங்கனா ரானவத் "இன்னைக்கு கண்டெண்ட் இதுதான். அரைகுறை அடைய அணிந்து இப்படித்தான் கோயிலுக்குள் செல்வார்களா" என்று பதிவு செய்திருக்கிறார். இப்பதிவிற்கு அதை அறிகுறி ஆடை அணியும் நீங்கள் சொல்லலாமா? யார் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று நீங்கள் எப்படி கருத்து சொல்லலாம் என்று நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.