நெட்பிளிக்ஸில் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ள தமிழ் படங்கள் என்னென்ன? வெளியானது அசத்தல் லிஸ்ட்.!
தனது வாயால் 40 கோடியை இழந்த பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்.. இவருக்கு இது தேவையா என்று நெட்டிசன்கள் கமெண்ட்.?
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் 2006 ஆம் ஆண்டு திரைத்துறையில் காலடியெடுத்து வைத்தார். இவர் இந்தி, தமிழ் போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். எப்போதும் சர்ச்சையை சுற்றி தான் கங்கனாகத் இருப்பார். சர்ச்சைக்கு பெயர் போன நடிகை என்றும் கூட சொல்லலாம்.
மேலும், எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து சர்ச்சையான கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவார். இதனால் இவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டு கடந்த வருடம் தான் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
தமிழில் சூப்பர் ஸ்டார், ஜோதிகா, நயன்தாரா, பிரபு போன்ற நடிகர்கள் நடித்த மிகப்பெரிய ஹிட்டான 'சந்திரமுகி' திரைப்படத்தை ஹிந்தி ரீமேக்கில் கங்கணா ரனாவத் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற நிலையில், கங்கணா ரனாவத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் அரசியல், சினிமா என எல்லாவற்றிலும் எனது கருத்தை துணிச்சலுடன் பேசியதால் வரவிருக்கும் வருவாயையும், சினிமா வாய்ப்பையும் இழந்திருக்கிறேன். ஆனால் இதைப் பற்றியெல்லாம் எனக்கு அக்கறை இல்லை. சமூக அக்கறை உடையவராக எப்போதும் இருப்பேன் என்று கங்கணா ரனாவத் கூறியிருக்கிறார்.