மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ஜெனிலியாவின் மகனா இது! முக்கியமான நாளில் மிக உருக்கமாக அவர் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதனை தொடர்ந்து அவர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்,மேலும் இவர் தனது குறும்பு தனம் மற்றும் கலகலப்பான குணத்தால் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார்.
இந்நிலையில் ஜெனிலியா கடந்த 2012ம் வருடம் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஜெனிலியா தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி குழந்தைகளையும், குடும்பத்தையும் கவனித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜெனிலியாவின் முதல் மகன் ரியான் 5வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு வாழ்த்து கூறி நடிகை ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அன்பு ரியான், ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர வேண்டாம். இப்படியே குழந்தையாகவே இருக்கட்டும் என்று கூறுவார்கள். ஆனால் நான் அப்படியல்ல, ஒரு நல்ல இளைஞனாக உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் சந்தோசமாக ரசிக்க விரும்புகிறேன்.
மேலும் நான் உனக்கு பறக்க இறக்கைகள் கொடுத்து, அந்த இறக்கைகளுக்கு அடியில் காற்றாக இருக்க விரும்புகிறேன்.வாழ்க்கை கடினமானது. ஆனால் நான் எப்பொழுதும் உன்னை நம்புவேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.