கில்லி படத்தில் முதலில் ஹீரோவாக தேர்வானது விஜய் இல்லை..! இந்த பிரபல நடிகர் தானாம்.! யார் தெரியுமா.?

நடிகர் விஜய்யின் வெற்றி படங்களில் மிகவும் முக்கியமானது கில்லி திரைப்படம். காதல், ரொமான்ஸ் என்று சென்றுகொண்டிருந்த விஜய்யின் சினிமா வாழ்க்கை கில்லி போன்ற ஆக்சன் படங்களால் வேற லெவெலுக்கு திரும்பியது என்றே கூறலாம். இந்நிலையில், கில்லி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 16 வருடங்கள் ஆகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியான கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மெகாஹிட் ஆனது. கில்லி படத்தை பிரபல இயக்குனர் தரணி இயக்கியிருந்தார். படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க, மிரட்டல் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.
கில்லி படம் தெலுங்கில் வெளியான ஒக்கடு என்ற படத்தின் ரீமேக் தான். இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்திருந்தார். தெலுங்கிலும் இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படி ஒரு மெஹா ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதன் முதலில் நடிகர் விக்ரமுக்குத்தான் சென்றுள்ளது.
ஆனால், விக்ரம் வேறுசில படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதன்பிறகு இந்த வாய்ப்பு விஜய்க்கு சென்றுள்ளது. இந்த தகவல் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.