நெட்பிளிக்ஸில் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ள தமிழ் படங்கள் என்னென்ன? வெளியானது அசத்தல் லிஸ்ட்.!
வட இந்திய பெண்ணாக, இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் குட்லக் சகி ரீசர்!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவருகிறார். மேலும் இறுதியாக அவரது நடிப்பில் உருவான பென்குயின் திரைப்படம் மும்மொழிகளிலும் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தற்போது குட்லக் சகி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நாகேஷ் குன்னூர் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை தில் ராஜ், வொர்த் ஏ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஆதி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கிராமத்தில் பிறந்து துறுதுறுவென சுற்றித்திரியும் பெண் எப்படி துப்பாக்கி சுடும் வீராங்கனையாக மாறுகிறார் என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.