மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
HBD Gopinath: நீயா நானா? புகழ் கோபிநாத்துக்கு இன்று பிறந்தநாள்; வாழ்த்து மழையில் நனைக்கும் ரசிகர்கள்.!
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த நிகழ்ச்சி நீயா நானா. இது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருப்பவர் கோபிநாத். இவர் நீயா நானாவில் பல உண்மையான விஷயங்கள் மற்றும் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை பேசுவதால், கோபிநாத் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
மேலும், இரண்டு தரப்புகளின் வாதங்களை கேட்டு, அவரவர் பக்கங்களில் உள்ள சரியான கூற்றை கூறுவார். அதில் எது சமூக பார்வைக்கு ஏற்றதோ அதனை குறிப்பாக எடுத்து பேசுவதில் இவர் வல்லவர்.
கோபிநாத் தொகுப்பாளர் மட்டுமின்றி ஒரு வானொலி கலைஞர், விவாதிப்பவர், பேச்சாளர், சிறந்த மனிதர் என்ற பல திறமைகள் இவரினுள் இருக்கிறது.
இதன் காரணமாகவே இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இன்று சிறந்த மனிதரான கோபிநாத்துக்கு பிறந்தநாள். இவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.