மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீயா நானா புகழ் கோபிநாத்தின் மகளுக்கு இப்படி ஒரு திறமையா... வைரலாகும் வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்கள்!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெகு நாட்களாக ஓடி கொண்டிருக்கும் ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக முக்கிய காரணம் தொகுப்பாளரான கோபிநாத் தான். இந்த நிகழ்ச்சி ஆரம்பம் ஆன நாள் முதல் இன்று வரை இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் மொத்த அரங்கத்தையும் தனது சாதுர்யமான பேச்சினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆளுமைத்திறனுக்கு சொந்தக்காரர் என்ற பெருமையும் கோபிநாத்தையே சேரும்.இவரின் பேச்சுக்கும் கருத்துக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்பவர்.
இந்நிலையில் கோபிநாத் துர்கா என்ற பெண்ணை மணந்த நிலையில் அவர்களுக்கு வெண்பா என்ற மகள் உள்ளார். வெண்பாவுக்கு கிட்டார் என்றால் மிகவும் பிடிக்குமாம். அப்படி ஒரு நாள் வாசிக்கும் போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.