மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் படத்திலேயே விக்ரம் மகனுக்கு ஏற்பட்ட சிக்கல்! ராதிகாவிற்கும் இப்படி ஒரு நிலைமையா?
தெலுங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்ற அர்ஜீன் ரெட்டி படத்தின் ரீமேக் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் படத்தின் கதையின்படி கதாநாயகன் அதிகமாக புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் பல இடங்களில் முகம் சுளிப்பது போன்று காட்சிகள் அமைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை சார்பாக துருவ் விக்ரமிற்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. மேலும் புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகளில் நடிப்பது தண்டனைக்குறிய குற்றம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே போன்று நடிகை ராதிகா சரத்குமாரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 'மார்க்கெட் ராஜா MBBS' படத்திற்காக ராதிகா கையில் சிகரெட் வைத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை கண்டித்து ராதிகாவிற்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.