போதையில் அடவாடி செய்த மாப்பிள்ளை தோழர்கள்.. திருமணத்தை நிறுத்தி ஷாக் கொடுத்த மாமியார்.!



   in Karnataka Bangalore Marriage Stopped by Mother In Law 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. அப்போது, திருமண நிகழ்வில் மணப்பெண், மணமகள் வீட்டார் மேடையில் இருந்தனர். 

அங்கு மதுபோதையில் வந்த மணமகன் தோழர்கள், போதையில் மேடையில் ஆடல்-பாடல் என ரகளை செய்துள்ளனர். இதனைக் கண்டு பொங்கியெழுந்த மணப்பெண்ணின் தாயார், திருமணத்தை நிறுத்தி இருக்கிறார். 

திருமணத்தை நிறுத்திய மாமியார்

திருமணத்திற்கு முன்பே நிலைமை இப்படி இருக்கிறது என்றால், திருமணத்திற்கு பின்னர் என்னென்ன செய்வீர்கள்? என மேடையிலேயே கேள்வி எழுப்பிய பெண்மணி, திருமணத்தை நிறுத்தி மகளை தன்னுடன் அழைத்துச் சென்றார். 

இதையும் படிங்க: மனைவிக்கு திருமண ஏற்பாடு செய்த கணவன்.. 12 ஆண்டுக்கு பின் நடந்த ருசிகர நிகழ்வு.!

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு சூழ்நிலை உண்டான நிலையில், மணமகன் வீட்டார் சமாதானம் செய்தும் எந்த பலனும் இல்லை. இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

பெங்களூரில் நடைபெற்றதாக கூறப்படும் சமபவத்தின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: திருமணம் முடிந்த 4 வது நாளில் கணவனுக்கு பால் ஊற்றிய மனைவி; கல்யாண பரிசாக சிறைவாசம்.!