மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
11 வருட திருமண வாழ்க்கை.! மனைவியை பிரிந்துவிட்டாரா ஜிவி பிரகாஷ்?? அவரே உடைத்த உண்மை!!
ஜிவி பிரகாஷ் குமார்
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக, தனது மெல்லிசை பாடல்களால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ஜிவி பிரகாஷ். அதனைத் தொடர்ந்து நடிகராக களமிறங்கிய அவர் சிறப்பாக நடித்து தற்போது பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் தங்கலான், வீரதீரச் செயல், அமரன், வணங்கான் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகிறது.
சைந்தவியுடன் காதல் திருமணம்
ஜிவி பிரகாஷ்குமார், தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகியுமான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஆறு மாதங்களாக தனியாக வாழ்ந்து வருவதாகவும், இருவரும் விவாகரத்து செய்து பிரியஉள்ளதாகவும் தகவல்கள் பரவியது.
இதையும் படிங்க: மனைவி மேல் இவ்வுளவு பாசமா?.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவகாரத்தால் வருத்தத்தில் நெட்டிசன்கள்.!
முடிவுக்கு வந்த 11 வருட மணவாழ்க்கை
இந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்து ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஜிவி பிரகாஷ், பல கட்ட யோசனைக்கு பிறகு
திருமணமாகி 11 வருடங்களுக்கு பிறகு,
நானும் சைந்தவியும் எங்களது பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, மன அமைதிக்காக, முன்னேற்றத்திற்காக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
இந்த இக்கட்டான சூழலில் ஊடக நண்பர்கள், ரசிகர்கள் எங்களது தனிப்பட்ட இந்த முடிவை புரிந்து கொள்ளவேண்டும் என கேட்டுகொள்கிறேன். நாங்கள் இருவரும் இதை ஒரு நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறோம். இந்த கடினமான சூழலில் உங்களுடைய புரிதல் மற்றும் ஆதரவு எனக்கு வேண்டும் என தெரிவித்துள்ளார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 13, 2024
இதையும் படிங்க: 11 வருஷம் வாழ்ந்தது போதும்... மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் ஜி.வி பிரகாஷ்..