மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்..நடிகை ஹன்சிகாவின் அண்ணியை பார்த்தீர்களா! அவருக்கே டஃப் கொடுப்பார் போல! அவ்ளோ அழகு!!
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனை தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது 50-வது படமான மஹா ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு முஷ்கான் என்பவருடன் கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமண கொண்டாட்டத்திற்காக, பெரிய அரண்மனையை வாடகைக்கு எடுத்து கோலகலமாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் அதில் நெருங்கிய குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவின் அண்ணன் மற்றும் அண்ணியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் ஹன்சிகாவின் அண்ணி மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.