மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட சின்ன வயசிலேயே சாக்லேட் பாயாக இருந்திருக்கிறாரே ஹரிஷ் கல்யாணம்.. ஷாக்கான ரசிகர்கள்?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்த பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசடதபற, ஓ மண பெண்ணே போன்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வரும் ஹரிஷ் அழகு மற்றும் நடிப்பு திறமையால் பெண் ரசிகைகளை அதிகம் ஈர்த்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தனது சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஹரிஷ் கல்யாண். இதனைப் பார்த்த இவரது ரசிகைகள் சிறு வயதிலேயே சாக்லேட் பாய் போல் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.