மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த பழங்களின் தோலை மறந்தும் கூட குப்பையில் போட்டு விடாதீர்கள்.!
காய்கறிகளையும், பழங்களையும் நம் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆனால் காய்கறிகளையும், பழங்களையும் சரியான அளவு எடுத்துக் கொள்கிறோமா என்பது பலருக்கும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
மேலும் சில பழங்களில் நாம் தோல்களை வெட்டி வீசிவிட்டு உள்ளே இருக்கும் பகுதியை மட்டும் உட்கொள்வோம். ஆனால் ஒரு சில பழங்களில் அவ்வாறு செய்யக்கூடாது. தோல்களிலும் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
அந்த வரிசையில் முதன் முதலில் "ஆப்பிள்" இவற்றை தோல்களை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடாது. தோல்களில் விட்டமின்களும், நார் சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன. எனவே தோலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
அடுத்ததாக "சப்போட்டா" பழத்தின் தோலையும் சேர்த்து சாப்பிட வேண்டும் தோலில் இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் இருக்கின்றது.
இதேபோன்று பேரிக்காய், பிளம்ஸ், கிவி பழம் போன்றவைகளையும் தோலோடு சேர்த்து சாப்பிட வேண்டும். தோலை நீக்கிவிட்டால் அந்த பழங்களில் இருக்கும் பாதி சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்காமலே போகும்.