அடக்கொடுமையே! ஹீரோ, தம்பி இருபடங்களுக்கும் இப்படியொரு சோதனையா? அதிர்ச்சியில் மூழ்கிய படக்குழு!



hero-thampi-movie-leaked-in-internet

பாபநாசம் பட புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ஜோதிகா இருவரும் அக்கா தம்பியாக நடித்து வெளிவந்த படம் தம்பி. இப்படத்தில் சத்யராஜ், சீதா, அம்மு அபிராமி, நிகிலா விமல், இளவரசு, சௌகார் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

thampi

அதனைப் போலவே தற்போது பி. எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் அர்ஜுன், இவானா, அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

thampi

இவ்வாறு இரு பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது இரு படங்களும் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதனால் இரு படக்குழுவினர்களும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.