மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. எவ்ளோ மேக்கப்பு! பங்கமாக கலாய்த்த மணிமேகலையின் கணவர்! அதுவும் யாரைனு பார்த்தீர்களா!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து தனது கலகலப்பான பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் மணிமேகலை. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தற்போது சிறந்த ஜோடியாகவும் வலம் வருகின்றனர்.
மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு தனது கலாட்டாவால், சேட்டைகளால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
இதற்கிடையில் மணிமேகலை கடந்த 2010ம் ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் அண்மையில் இணையத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பகிர்ந்த மணிமேகலையின் கணவர் ஹீசைன், ப்பா யார்ரா இந்த பொண்ணு.. இவ்ளோ மேக்கப் போட்டு என பங்கமாக கலாய்த்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.