மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சாய் பல்லவியை எனக்கு மிகவும் பிடிக்கும்" - பாலிவுட் நடிகர் மனம் திறந்த பேட்டி!
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கஸ்தூரிமான் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிரேமம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகை ஆனார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து கலி என்ற திரைப்படமும் இவருக்கு மலையாளத்தில் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
தமிழில் சூர்யாவுடன் என் ஜி கே, தனுஷீடன் மாரி 2 திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய அசாத்தியமான நடனமும் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. 2022 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான கார்கீ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . அந்தத் திரைப்படத்தில் இவரது நடிப்பை பலரும் வியந்து பாராட்டினர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவ்யா தனக்கு சாய் பல்லவியை மிகவும் பிடிக்கும் என ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். சாய் பல்லவியின் நடிப்பு மற்றும் நடனம் தன்னை மிகவும் கவர்ந்தது என குறிப்பிட்டு இருக்கும் அவர் இது பற்றி தான் சாய் பல்லவியிடம் கூறியதில்லை என்றும் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது கூறுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இவர் சைத்தான் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.