பஞ்சாப் மாநிலத்தின் அடையாளமாக மாறிய சோனு சூட்.! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.!



icon of punjab actor sonu sood

தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற கள்ளழகர், கோவில்பட்டி வீரலெட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் பாலிவுட்டிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

நடிகர் சோனு சூட், நாடு முழுவதும் இந்த கொரோனா பொது முடக்கத்தான் போது, பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். முக்கியமாக புலம்பெயர்ந்தோர் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக, தனது சொந்த செலவில் வாகனங்கள் ஏற்பாடு செய்து அவர்களை பத்திரமாக மீட்டு வந்தார். கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கபட்ட நிலையில் அவர், கொரோனோவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் தங்குவதற்காக தனது 5 நட்சத்திர ஹோட்டலை வழங்கினார். 

Sonu sood

இந்த கொரோனா சமயத்தில் அவர் செய்த உதவிகள், இந்தியா முழுவதும் அவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது. மனிதநேயத்துடன் சமூக தொண்டு ஆற்றி, ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் இடம்பிடித்தார். இந்நிலையில், பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜூ, சோனு சூட்டை, பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக(ஐகான்) ஆக நியமிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்தார். இதனை தேர்தல் கமிஷனும் ஏற்றுக் கொண்டு, அவரை பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக அறிவித்துள்ளது.