'கூலி'யிடம் கூலி கேட்கும் இளையராஜா; தனது இசையை பயன்படுத்தியாக குற்றச்சாட்டு..!



Ilayaraja Raise Complaint for Coolie Movie Song Copyrights 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து, படத்தின் டீசர் காட்சிகளும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், படத்தின் டீசர் காட்சியில் இடம்பெற்ற வீடியோவில், "வா பக்கம் வா" பாடல் இசைக்கு தனது இசையை பயன்படுதியாக இளையராஜா கூறியுள்ளார். 

மேலும், தனது இசையை பயன்படுத்தியதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது இசையை நீக்க வேண்டும் எனவும் இளையராஜாவின் தரப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கெடுவிதிக்கப்பட்டுள்ளது.

தங்களின் கோரிக்கைகைக்கு செவி சாய்ய்க்காவிடில் சட்டரீதியாக பிரச்சனை அணுகப்படும் என்றும் இளையராஜா தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ரஜினியின் கூலி படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ள குறிப்பிடத்தக்கது.