"எப்படி இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்?" - ஃப்ரன்ட்ஷிப் கோல் இப்படியா?..



Friendship Goal about Rumor Reasons 

 

 

உலகளவில் உடற்பருமன் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகள் என்பது அதிகம் ஏற்பட்டு வருகிறது. மாறிவரும் கலாச்சாரம், வீட்டிலேயே குழந்தைகள் இருக்கும் சூழல், செல்போனுக்கு அடிமையாகுதல் போன்றவைகளால் அவர்களின் உடல் உழைப்பு திறன் என்பது குறைந்துள்ளது.

இதையும் படிங்க: ஷாவோலின் கோவிலில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய சிறார்கள்; வியக்க வைக்கும் வீடியோ.!

எனினும், ஸ்மார்போன்களை சரியாக பயன்படுத்தும் இளைஞர்கள், அதன் வாயிலாக பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டு, தங்களின் எதிர்கால வாழ்க்கையை முந்தைய காலங்களை போல அல்லாமல், இளவயதில் இருந்து சிற்பியாய் செதுக்குகின்றனர்.

இதனிடையே, சமூக வலைத்தளத்தில் உடல் எடையுடன் இருக்கும் நண்பர்களின் புகைப்படமும், உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ள புகைப்படமும் வைரலாகி வருகிறது. இந்த பதிவில், நண்பர்கள் குழு ஒன்றாக சேர்ந்து 2022ல் உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைக்கவும், 2023ல் மீண்டும் அவர்களின் உடல் எடை அதிகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

ஃப்ரன்ட்ஷிப் கோல்-க்கு இலக்கணமாக பல விஷயங்கள் இருந்தாலும், இந்த புகைப்படத்தை வெளியிட்டு பதிவர் அதனை வைரலாக்கி இருக்கிறார். விபரம் தெரியாதவர்கள் அதனை அடிப்படையாக வைத்து நாங்களும் உடல் எடையை கட்டுக்குள் வைப்போம் என கருத்து தெரிவிக்கின்றனர். ஒருசிலர் தொப்பையுடன் இருக்கும் புகைப்படமே பின்னர் எடுக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உடலை கட்டுக்கோப்பாக மாற்றாமல், இவ்வாறு ஆகிவிட்டனர் என கருத்து தெரிவிக்கின்றனர்.
 

இதையும் படிங்க: உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர்; வலியோடு மனம்நெகிழ்ந்து நன்றி கூறிய ரைடர்.. நெகிழவைக்கும் வீடியோ.!