"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
சென்னையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்கார விவகாரம்; பள்ளி மாணவர் உட்பட 2 பேர் கைது.!
மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அயனாவரத்தில் நடந்துள்ளது.
தந்தையின் சந்தேகம்
சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் வசித்து வரும் 21 வயதுடைய இளம்பெண், அண்ணா சாலை பகுதியில் செயல்படும் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இவர் 40% மனநல பாதிப்பு கொண்டவர் ஆவார். இதனால் தினம் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்று வந்துள்ளார். இதனிடையே, மகளின் செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் வருவதை அறிந்த தந்தை, மகளிடம் விசாரித்து கூறுமாறு பக்கத்து வீட்டு பெண்ணின் உதவியை நாடி இருக்கிறார்.
இதையும் படிங்க: 21 வயது கல்லூரி மாணவி 10 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்.. ஸ்னாப்சாட் பழக்கம், விடுதிவிடுதியாக கொடூரம்.!
அதிர்ச்சி தகவல் அம்பலம்
அவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசியதில் கல்லூரிக்கு சென்று வரும்போது, சிலர் தன்னிடம் பேசிப்பழகி விடுதிக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்தனர். இவர்கள் என்னுடன் கல்லூரியில் பயின்று வரும் தோழியின் நண்பர்கள். இந்த செயல் ஓராண்டாக தொடருகிறது என கூறி அதிரவைத்துள்ளார். பின் இதுகுறித்து மாணவியின் தந்தை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
9 பேரின் மீது வழக்குப்பதிவு
இதன்பேரில், நரேஷ், சுரேஷ், கவின், ரோஷன், கார்த்திக், பாண்டியன், மாணவியின் தோழி உட்பட 9 பேரின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவி மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி 17 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறிய நிலையில், இந்த விவகாரம் மீண்டும் பெரும் அதிர்வலையை உண்டாகியுள்ளது.
விடுதிவிடுதியாக அழைத்துச் சென்று கொடுமை
இந்நிலையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ், 12 ம் வகுப்பு பள்ளி மாணவர் என இரண்டு நபர்கள் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், இருவரும் பெரியமேடு, வால்டாக்ஸ் சாலை பகுதிகளில் இருக்கும் விடுதிக்கு, மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிற நபர்களையும் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஸ்னாப்சாட் வாயிலாக பழகி மாணவியை பலாத்காரம் செய்த நபர்களுக்கும் வலைவீசப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; காதல் பெயரில் அத்துமீறிய இளைஞர் போக்ஸோவில் கைது.!