17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; காதல் பெயரில் அத்துமீறிய இளைஞர் போக்ஸோவில் கைது.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹோஸ்கோட் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி, பெற்றோருடன் இருக்கிறார். அங்குள்ள பள்ளியில் இவர் 12ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக ரிவர்ஸ்; அடிச்சி தூக்கிய லாரி.. 10 பேர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
சிறுமி பலாத்காரம்
இதனிடையே, சிறுமிக்கு சேத்தன் குமார் என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் ஆசையாக பேசுவது போல் நெருங்கி பழகிய சேத்தன், பலமுறை அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
போக்ஸோவில் கைது
ஒரு கட்டத்தில் சேத்தனின் செயல்பாடுகள் எல்லை மீறவே, சிறுமி தனது தந்தையிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதன் பெயரில் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சேத்தன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 62 வயது காமுகனால் 13 வயது சிறுமி பலாத்காரம்; கர்ப்பத்தால் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!