21 வயது கல்லூரி மாணவி 10 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்.. ஸ்னாப்சாட் பழக்கம், விடுதிவிடுதியாக கொடூரம்.!



  in Chennai 21 Aged College Girl Student Raped 

நண்பர்கள் போல பழகி, மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த கொடுமை சென்னையை அதிரவைத்துள்ளது.

கல்லூரி மாணவி

சென்னையைச் சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண், அண்ணா சாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தினமும் ஆட்டோ மூலமாக கல்லூரிக்கு சென்று வருவார். இவர் தனது தோழியின் உதவியுடன் ஸ்னாப்சாட் மூலமாக நண்பர்களிடம் பழகி வந்துள்ளார். 

இதையும் படிங்க: 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; காதல் பெயரில் அத்துமீறிய இளைஞர் போக்ஸோவில் கைது.!

பாலியல் பலாத்காரம்

இதனிடையே, லேசான மனநலப்பாதிப்பு கொண்ட சிறுமி, சில நாட்களாகவே அதிகம் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரியவருகிறது. இதுகுறித்து தந்தை மகளிடம் விசாரித்தபோது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை அதிர்ச்சிப்பட தெரிவித்து இருக்கிறார். இதன்பேரில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Rape

விடுதி-விடுதியாக அழைத்துச் சென்று கொடுமை

அதாவது, மாணவியை கல்லூரி மாணவர்களான நண்பர்கள் பெரியமேடு உட்பட பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. சுமார் 10 க்கும் மேற்பட்டவர்களால் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பெண்ணின் செல்போன் அழைப்புகள், பதிவுகளின் பேரில் விசாரணை தொடருகிறது. 

9 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இந்த விவகாரம் தொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டாக மாணவியிடம் கல்லூரி மாணவர்கள் அத்துமீறியது அம்பலமாகி இருக்கிறது.

இதையும் படிங்க: 62 வயது காமுகனால் 13 வயது சிறுமி பலாத்காரம்; கர்ப்பத்தால் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!