மகனின் பிறந்தநாளில் தந்தை கொடூர கொலை; முன்விரோதத்தால் இரும்பு கம்பியால் அடித்து பயங்கரம்.!
முன்விரோதம் காரணமாக மகனின் பிறந்தநாள் அன்றே சிறுவனின் தந்தை கொலை செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பகுதியில் வசித்து வருபவர் ராஜா சிங். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன்.
இதையும் படிங்க: "சேர்ந்து வாழ வரமாட்டியா.." கள்ள காதலன் மீது கொலைவெறி தாக்குதல்.!! இளம் பெண் கைது.!!
இவர்கள் இருவருக்கும் திருவிழாவின் போது பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனிடையே, நேற்று ஜெகனின் மகனுக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
நிகழ்விடத்தில் பலி
உற்சாக மிகுதியில் அவர் மதுபானமும் அருந்தி இருக்கிறார். அச்சமயம், ராஜா சிங் - ஜெகன் இடையே எழுந்த தகராறில், ராஜ்சிங் ஜெகனை இரும்பு கம்பியால் தாக்கி இருக்கிறார். இதனால் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ராஜா சிங் கொலையை அரங்கேற்றிவிட்டு, காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைந்தார். அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: செல்போனால் பறிபோன உயிர்.!! பெயிண்டருக்கு நேர்ந்த கோர முடிவு.!!