கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து பலியான 17 வயது பள்ளி மாணவி; மதுரையில் சோகம்.!
17 வயதுடைய பள்ளி மாணவி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, கட்டக்குளம் பகுதியில் வசித்து வருபவர் அழகர். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் ஆனந்தி. 17 வயதுடைய சிறுமி, அங்குள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும் பயின்று வருகிறார்.
நேற்று சிறுமி வழக்கம்போல காலையில் பள்ளிக்குச் சென்ற நிலையில், வழிபாட்டு நிகழ்ச்சியின்போது வகுப்பறையில் வரிசையாக நின்றபோது மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: "எப்ப பாரு ஃபோன நோண்டிக்கிட்டு.." பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்.!! மாணவிக்கு நேர்ந்த துயரம்.!!
மயங்கி விழுந்து மரணம்
மருத்துவர்கள் மாணவியை பரிசோதனை செய்தபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெற்றோரின் சம்மதத்துடன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Death File Pic
இந்த விஷயம் குறித்து பெற்றோர் கூறுகையில், மாணவி ஹீமோகுளோபின் குறைவு காரணமாக உடல் பலவீனத்துடன் இருந்தார். கடந்த வாரம் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார் என தெரிவித்துள்ளனர்.
இரத்த சோகை பாதிக்கப்பட்ட நிலையில் சோகம்
இதனால் உடல்நலக்குறைவால் சிறுமி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இரத்த சோகை பிரச்சனையால் மாணவி அவதிப்பட்டுள்ளார். இதனால் மாதவிடாயின்போது அதிக இரத்தம் வெளியேறியும் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
பரிசோதனை முடிவில் அது தெரியவரும். இரத்த சோகை பிரச்சனை இருப்போர், அதனை எளிதாக எண்ணாமல் செயல்பட வேண்டும். உடல் நலமுடன் இருப்போரும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் உடல் நலனை சோதித்துக்கொள்ள வேண்டும். இரத்த சோகை உயிரிழப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவு எனினும், அப்பிரச்சனை தீவிரமானால் உடல் செயல்பாடுகள் குன்றி பிற விளைவுகளாக மரணம் வரலாம் என தெரிவிக்கின்றனர்.
இரத்த சோகை பிரச்சனை உடையோர் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என எனவும் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: முதல் கள்ளகாதலனின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டாவது கள்ளக்காதலன்; எஸ்கேப் ஆன டோலி.. மதுரையில் பகீர்.!