குஷியோ குஷி.. 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை; திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருநாள் பந்தடிகை வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலத்தில் இருந்தும் திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு மக்கள் வருவார்கள் என்பதால், பயண வசதியும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் காவலர்கள்
குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு 16 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
9 நாட்கள் விடுமுறை
இதனால் திருவண்ணாமலையில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும், அதன் அருகில் உள்ள 156 பள்ளிகளுக்கு வரும் 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: விழுப்புரத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. முதல் மாவட்டமாக வெளியானது அறிவிப்பு.!
வரும் டிசம்பர் 08 முதல் டிசம்பர் 16 வரையில் 156 பள்ளிகள் விடுமுறையில் இருக்கும். கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு வருகை தரும் காவல்துறை அதிகாரிகள், 156 பள்ளிகளில் தங்கவைக்கப்படுகின்றனர். இதனால் இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 62 வயது காமுகனால் 13 வயது சிறுமி பலாத்காரம்; கர்ப்பத்தால் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!