மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. கொழுக் மொழுக்கென மாறிய பிகில் நடிகையா இது! எடை குறைஞ்சு எப்படி ஆகிட்டாரு பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோ வைபவ்விற்கு தங்கையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் இந்துஜா. இதனை தொடர்ந்து அவர் 60 வயது மாநிறம், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்துஜா தற்போது காக்கி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கொழுக் மொழுக்கென இருந்த அவர் தற்போது தீவிர உடற்பயிற்சிக்கு பின் உடல் எடை குறைந்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இந்துஜா அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது உடல் எடை மெலிந்துள்ள இந்துஜா தற்போது செம ஸ்டைலாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி
வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் செம ஷாக்காகியுள்ளனர்.