பிஞ்சு குழந்தை படுகொலை... முறை தவறிய உறவால் விபரீதம்.!! காதலானுக்கு வலை வீச்சு.!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏமாற்றிய காதலன்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷகீனா பேகம். 22 வயதான இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரகடம் பகுதியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமன் என்ற 25 வயது வாலிபருக்குமிடயே காதல் மலர்ந்திருக்கிறது. மேலும் ஷகீனா பேகத்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் நெருக்கமாக இருந்திருக்கிறார் சுமன். இதன் காரணமாக ஷகீனா பேகம் கர்ப்பமடைந்துள்ளார்.
தலைமறைவான காதலன்
இதனைத் தொடர்ந்து கர்ப்பமடைந்த விஷயத்தை காதலன் சுமனிடம் தெரிவித்திருக்கிறார் ஷகீனா பேகம். ஆனாலும் சுமன், பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என காலம் கடத்தி வந்திருக்கிறார். இதன் பிறகு ஷகீனா பேகத்திடம் பேசுவதை தவிர்த்து வந்த அவர் தமிழகத்திலிருந்து தலைமறைவாகி இருக்கிறார். இதனையடுத்து தனது காதலனை தேடி அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். அங்கும் சுமனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் மீண்டும் தமிழகத்திற்கு வந்து செங்கல்பட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பணியாற்றி வந்திருக்கிறார் ஷகீனா.
இதையும் படிங்க: "ஏண்டி லேட்டா வந்த.. " மகளின் உயிரை பறித்த கேள்வி.!! 20 வயது மாணவி தற்கொலை.!!
பச்சிளம் குழந்தை படுகொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் உள்ள அனைவரும் வேலைக்குச் சென்ற நிலையில் தனியாக இருந்திருக்கிறார் ஷகீனா. அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்படவே விடுதியில் யாரும் இல்லாததால் தனக்குத்தானே பிரசவம் பார்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பிரசவத்தின் போது ஏற்பட்ட உதிரப் போக்கை தொடர்ந்து மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தையின் அழு குரல் கேட்கவே சுயநினைவிற்கு திரும்பிய ஷகீனா என்ன செய்வது என்று தெரியாமல் தனது குழந்தையை தூக்கி அருகே உள்ள குளத்தில் வீசி இருக்கிறார். இந்நிலையில் விடுதியில் வேலைக்குச் சென்றவர்கள் மாலை திரும்பி வந்ததும் தனக்கு நடந்த விஷயங்களை அவர்களிடம் விவரித்து இருக்கிறார் ஷகீனா. இதனைத் தொடர்ந்து குளத்தில் வீசப்பட்ட குழந்தையை மீட்டு பரிசோதித்துப் பார்த்தபோது குழந்தை இறந்து விட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில் தாய்
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு ஷகீனா பேகத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதிக ரத்தப்போக்கு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஷகினா பேகத்தின் அனுமதியுடன் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் ஷகீனா கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள அவரது காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குழந்தை கொல்லப்பட்டது தொடர்பாக தாய் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பார்சல் உணவில் கையுடன் வந்த சில்வர் கோட்டிங்., பசிக்கு உணவு வாங்கிய சாமானியனுக்கு பேரதிர்ச்சி.. சென்னை மக்களே கவனம்.!