மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாகும் பிரபல முன்னணி நடிகர்? வெளியான செம மாஸ் தகவல்!
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா என நான்கு முன்னணி நடிகைகள் நடிக்க உள்ளனர்.
மேலும் அவர்களுடன் நடிகர் பிரகாஷ் ராஜ், சதீஸ், சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அண்ணாத்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தியதைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் மீண்டும் துவங்க உள்ளது.
இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜாக்கி ஷெராப் ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தமிழில் ஆரண்ய காண்டம், கோச்சடையான் மாயவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.