மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரசிகர்களின் தொந்தரவு.. ஜெயிலர் பட நடிகர் சிவராஜ்குமாரின் அதிரவைக்கும் பேச்சு.!
கன்னட நடிகரான சிவராஜ்குமார், தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கன்னட ரசிகர்களால் "சிவாண்ணா" என்று அன்போடு அழைக்கப்படும் சிவராஜ்குமார், மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 'ஜெயிலர்' படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இவரது ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தொடர்ந்து தனுஷ் நடிக்கும் " கேப்டன் மில்லர்" படத்திலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், சிவராஜ்குமாரின் நடிப்பில் கன்னடத்தில் "கோஸ்ட்" திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது அவரளித்த பேட்டியில், "நான் சாலையோரக் கடைகளில் சாப்பிடும்போது, ரசிகர்களுக்கு தொந்தரவு ஏற்படும்.
ஆனால், ரசிகர்களின் தொந்தரவில் நான் எப்போதும் மகிழ்ச்சி, பெருமை, திமிர் ஆகியவற்றைத் தான் உணர்கிறேன். ரசிகர்களின் தொந்தரவை நான் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்வேன்" என்று கூறியுள்ளார்