இளையராஜா பண்பற்ற மட்டமான மனிதர்... கடுமையாக விமர்சித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் .!?



James vasanthan angry speech about ilaiyarajas attitude

திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குநருமான ஜேம்ஸ் வசந்தன் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் 2008 ஆம் வருடம் முதன் முதலில் சுப்ரமணிய புரம் படத்தில் இசையமைத்து தன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இதன்பின் பசங்க, நாணயம், யாதுமாகி, ஈசன், சண்ட மாருதம், ஓ அந்த நாட்கள் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜா

மேலும் இவர் சுப்ரமணிய புரம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதையும், ஈசன் படத்திற்காக சிறந்த கிராமிய பாடலுக்கான விருதையும் பெற்றிருக்கிறார். கடைசியாக 'ஓ அந்த நாட்கள்' என்ற திரைப்படத்தை இயக்கிருக்கிறார். இவர் இளைய ராஜாவிடம் தான் இசை பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தைகைய நிலையில் யூ ட்யுபில் ஒரு பேட்டியில், ஜேம்ஸ் வசந்தன் தனது குருவான இளையராஜாவை மட்டமான மனிதர், அறிவற்றவர், என்ற சில தகாத வார்த்தையால் கடுமையாக விமர்சித்தார். இதனை தொடர்ந்து இளையராஜா ஆன்மிகத்தில் அதிகம் ஈடுபடுபவர். ஆன்மீகத்தில் இருப்பவருக்கு பொறுமை, சகிப்பு தன்மை அதிகம் இருக்க வேண்டும் ஆனால் இளையராஜாவிடம் அந்த குணங்கள் இல்லை. இவரை பின்தொடரும் ரசிகர்களுக்கு இவர் தவறான உதாரணமாக இருக்கிறார் என்று கூறினார்.

இளையராஜா

இதன்பின், இளையராஜா சில இசை நிகழ்ச்சிகளின் மேடையில் நடந்துகொண்ட விதத்தை எடுத்துகாட்டி பேசினார். அதில் சமீபத்தில் இளையராஜா ஒரு பட வெளியீட்டு விழாவில் கிறிஸ்தவ மதத்தை பற்றி தவறாக கூறினார். கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையை அசிங்கபடுத்துவது போல் இளையராஜா போன்ற மேதைகள் மேடையில் பேசுவது சரியல்ல என்று அந்த பேட்டியில் சொல்லிருக்கிறார். இளையராஜாவை பற்றி தவறாக பேசியிருப்பது அவரது ரசிகர்களை கோவமடைய செய்திருக்கிறது.