35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
நம்ம ஜாங்கிரி மதுமிதாவுக்கு கல்யாணம்! மாப்பிளை யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகையாக வலம் வருபவர் மதுமிதா. இவர் சின்னத்திரையில் லொல்லு சபா, மற்றும் சின்னப்பாப்பா , பெரிய பாப்பா என்ற காமெடி சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
பின்னர் உதயநிதி மற்றும் சந்தானத்துடன் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மாபெரும் பிரபலமாகி அவருக்கென ரசிகர் பட்டாளமே உருவானது.
அதனை தொடர்ந்து ஜாங்கிரி மதுமிதா இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காக்கி சட்டை, புலி, ஹலோ நான் பேய் பேசுறேன், சரவண இருக்க பயமேன், மற்றும் சமீபத்தில் அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் போன்ற படங்களில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
இந்நிலையில் ஜாங்கிரி மதுமிதாவுக்கும் , அவருடைய தாய் மாமன் மகன் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மோசஸ் ஜோயல் பல குறும்படங்களை இயக்கிய இயக்குனர். மேலும் பிரபல திரைப்பட இயக்குனரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஜாங்கிரி மதுமிதாவுக்கும், மோசஸ் ஜோயல்க்கும் வரும் பிப்ரவரி 15ம் தேதி கோயம்பேட்டில் உள்ள JP ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. மேலும் திருமண பந்தத்தில் இணையபோகும் இந்த ஜோடிக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.