தமிழே தெரியாது, ஆனால் பாடல் மட்டும் தெரியும் - சிறுமியின் நெகிழ்ச்சி பாட்டு.. வீடியோ வைரல்.!



Papua New Guinea Tribal Girl Sing Tamil Song 

 

பண்டையத் தமிழர்கள் உலகம் முழுவதும் சென்று வாணிபம் செய்ததற்கான ஆவணங்களும், அவர்கள் பிற நாடுகளுடன் கொண்டிருந்த நட்புறவும் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. சேரர், சோழர், பாண்டியர் அல்லாது, அதற்கு முன்பே தமிழ் மொழியும், தமிழர்களும் உலகளவில் பரவி இருந்துள்ளனர். 

இந்தியாவைத் தேடி

இந்தியா என்ற தேசம் இருப்பதை கண்டறியவே, நெடுந்தூரத்தில் இருந்து கடல் பயணம் மேற்கொண்டும் கொலம்பஸ் வந்திருந்தார். அவருக்கு முந்தைய காலத்திலேயே இந்தியா தொடர்பான அறிமுகம் இருந்திருக்க வேண்டும் என்பதாலேயே, அவர் இந்தியாவை தேடி பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை உறுதி செய்யும் சான்றுகள் பலவும் வரலாற்று ஆய்வுகளில் தென்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு? 

தமிழர்களின் அடையாளம்

தற்போதைய நவீன உலகத்தில் தமிழர்கள் வாழ்ந்த தடயங்கள் பல நாடுகளில் அவர்களின் ஊர்களின் பெயராகவும், பண்பாடு ரீதியாகவும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, பப்புவா நியூ கினியா நாட்டில் வசித்து வரும் பழங்குடியின சிறுமி ஷியீலா, தமிழ் மொழி பாடல்களை மொழியே புரியாமல் கற்றுக்கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. 

சிறுமியின் ரசிக்கவைக்கும் பாடல்

அந்த சிறுமி பாடலை ஒருமுறை கேட்ட பின்னர், அதன் இசையை வைத்து அதன் ரகத்தை புரிந்துகொண்டு இருக்கிறார். பின் அதே பாடலை அழகுற பாடியும் பயிற்சி பெற்றுள்ளார். அந்த சிறுமி தமிழில் ஒருதலை காதலை தந்த, அனல்மேலே பனித்துளி பாடலை பாடினார். இந்த வீடியோ உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

 

வீடியோ நன்றி: NewsMTamil 

இதையும் படிங்க: மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?