மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாவாடை தாவணியில், காதலருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகை ஸ்ரீ தேவி மகள்.! வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து டாப் ஸ்டாராக, இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. பாலிவுட்டிற்கு தாவிய அவர் அங்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இந்நிலையில் அவர் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் ஜான்வி கபூர் தடக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்து தற்போது பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் தங்கை குஷி கபூருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் அப்பொழுது அவர்களுடன்
மராட்டிய முன்னாள் முதல்- மந்திரி சுசில் குமார் ஷிண்டே பேரன் ஷிகர் பஹாரரியாவும் தரிசனம் செய்துள்ளார். ஏற்கனவே ஷிகர் பஹாரரியாவுக்கும், ஜான்வி கபூருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தது. இந்நிலையில் தற்போது இருவரும் ஜோடியாக கோவிலில் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.