மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் எப்போது ரிலீஸ்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு பிறகு ரிலீஸான இறைவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத பார்த்தேன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே நடிகர் ஜெயம் ரவி அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி என்ற பேண்டஸி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.