மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மௌனராகம் 2! வளர்ந்த சக்தியாக, ஹீரோயினாக நடிக்கும் அந்த இளம்பெண் யார்னு தெரிகிறதா? வாயடைத்துபோன ரசிகர்கள்!
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த தொடர் மௌனராகம்.
சக்தி என்ற சிறுமியின் இசையை வைத்தும், தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை மையமாக வைத்தும் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் கடந்த 3 வருடமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் கடந்த வாரம் முடிவடைந்தது.
இந்நிலையில் மௌனராகம் சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மௌனராகம் 2 விரைவில் ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் சக்தி வளர்ந்து இளம் பெண்ணாக மாறிவிடுகிறார்.
இந்த பருவமங்கை சக்தி கதாபாத்திரத்தில் ரவீனா தாஹா நடிக்கிறார். அவர் கதை சொல்ல போறோம் மற்றும் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து சின்னத்திரைக்கு தாக்கியதாக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா மற்றும் காரைக்கால் அம்மையார் தொடர்களில் நடித்துள்ளார்.