மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. கணவர் சூர்யாவையே மிஞ்சிடுவார் போல.! வேற லெவல் வீடியோவால் வாயடைத்துபோன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார். நடிகை ஜோதிகா பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்த நடிகை ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவர் பொன்மகள் வந்தாள், ராட்சசி என கதாநாயகிக்கு, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது நடிகர் சூர்யாவையே ஓவர்டேக் செய்யுமளவிற்கு கடுமையாக ஒர்க்கவுட் செய்துள்ளார். இந்த வீடியோவை அவர் வெளியிட்ட நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.