மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நம்பிக்கை துரோகம் தான், அவரது சினிமா வாழ்க்கை முடிய காரணம்.." நடிகர் பிரசாந்த் குறித்து செய்யாறு பாலு பேட்டி.!
90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் ஆக வளம் வந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் செம்பருத்தி கல்லூரி வாசல் போன்ற திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். இளம் நடிகராக இருந்தபோது இவரது சினிமா வாழ்க்கையில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
எனினும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த இவர் கண்ணெதிரே தோன்றினாள் பார்த்தேன் ரசித்தேன் சாக்லேட் போன்ற திரைப்படங்களின் வெற்றியால் விஜய் அஜித் ஆகியோருக்கு போட்டியான ஹீரோவாக வலம் வந்தார். இந்நிலையில் 2005ஆம் ஆண்டு இவருக்கு கிரகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த பிறகு தான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற உண்மை பிரசாந்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்ததோடு சினிமா வாழ்க்கையையும் கடுமையாக பாதித்தது. தனது மனைவியை 2009 ஆம் வருடம் பிரசாந்த் விவாகரத்து செய்தார். எனினும் சினிமாவில் அவரால் முழுவதுமாக கவனம் செலுத்த முடியவில்லை.
இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு "பிரசாந்தின் திருமணம் அவருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என குறிப்பிட்டு இருக்கிறார். அவரது திருமணமும் அதனை சுற்றி நடந்த நிகழ்வுகளும் அவரது சினிமா வாழ்க்கையை முற்றிலுமாக பாதித்துவிட்டது" என தெரிவித்துள்ளார். இன்று விஜய் அஜித் போல மிகப் பெரிய நடிகராக உருவாகி இருக்க வேண்டியவர் தனது திருமண வாழ்க்கையால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க போராடிக் கொண்டிருக்கிறார் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.