மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா இவருமா.! பேரழகியாக பளபளக்க ஜூலி செய்த காரியத்தை பார்த்தீங்களா! தீயாய் பரவும் வீடியோ!!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஜுலி. அதற்கு முன்பு அவர் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அவரை ரசிகர்கள் கொண்டாடினர்.
ஆனால் பின்னர் அவரது சில மோசமான செயல்களால் மக்களின் வெறுப்புக்கு ஆளானார். பின்னர் இன்றுவரை அவர் என்ன செய்தாலும் அவரை வறுத்தெடுக்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனாலும் அதனை ஜூலி சிறிதும் பொருட்படுத்துவதில்லை. மேலும் மக்களுக்கு தன் மீது இருக்கும் வெறுப்பை நீக்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துக்கொண்டார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ஜூலி அண்மையில் தனது முகம் பளபளப்பாக ஜொலிக்க அழகு சிகிச்சை ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் இந்த சிகிச்சையை நடிகை ஸ்ரீதேவி முதல் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரை அனைவரும் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.