மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்... சோகத்தில் ரசிகர்கள்!!
மறைந்த பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகன் தான் ஜூனியர் பாலையா. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து கரகாட்டக்காரன், சுந்தர காண்டம், சாட்டை போன்ற 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். வயது முதிர்வின் காரணமாக சினிமாவிருந்து விலகி இருந்த ஜூனியர் பாலையா வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே இன்று அதிகாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் இறப்பிற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.