மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் மன்னன் பட நடிகை திலோத்தம்மா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
தல அஜித் நடித்த படங்களில் மிகவும் முக்கியமான படங்களில் ஓன்று காதல் மன்னன். தல அஜித்தின் இந்த வளர்ச்சிக்கு காதல் மன்னன் படத்தின் பங்கும் உண்டு. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திலோத்தம்மா கேரக்டரில் ஒருவர் நடித்திருப்பார். அவருடைய உண்மையான பெயர் மானு. தனது 16 வயதில் வந்த வாய்ப்பு தான் தல அஜித்தின் காதல்மன்னன் பட வாய்ப்பு.
காதல் மன்னன் படத்திற்கு பிறகு இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதன்பின்னர் சந்தீப் துரா என்னும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2011ஆம் ஆண்டு ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டபோது அவருடன் இருந்து கவனித்துகொண்டது மானுதான்.
பின்னர் நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதை அடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு மோகன்ராஜா நடிப்பில் வெளிவந்த என்ன சத்தம் இந்த நேரம் என்னும் படத்தில் 16 வருடங்களுக்கு பிறகு நடித்தார் . இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது. இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இவர் என கமெண்ட் செய்துவருகின்றனர்.