மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! காதல் சந்தியா இப்போ எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! அவருக்கு இவ்வளவு பெரிய மகளா? புகைப்படங்கள் இதோ!
தமிழ் சினிமாவில் காதல் என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்தியா. இந்த படத்தின் மூலம் இவரை அனைவரும் காதல் சந்தியா என்று அழைக்க தொடங்கினர். மேலும் அவர் தான் நடித்த முதல்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர் டிஷ்யூம், வல்லவன், கூடல்நகர், தூண்டில், வெள்ளித்திரை, மஞ்சள் வெயில், இரும்பு கோட்டை முரட்டுசிங்கம் நூற்றுக்கு நூறு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை சந்தியா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சந்தியா சென்னையை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு ஷீமா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. அதனை தொடர்ந்து சந்தியா நடிப்பதை விடுத்து முழுமையாக குடும்பத்தை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை சந்தியா அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் சந்தியாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.