மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த நோயால் தினமும் கதறிதுடித்த காதல் சந்தியாவின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் காதல் என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்தியா. இந்த படத்தின் மூலம் இவரை அனைவரும் காதல் சந்தியா என்று அழைக்க தொடங்கினர். மேலும் அவர் தான் நடித்த முதல்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.அதனை தொடர்ந்து அவர் டிஷ்யூம், வல்லவன், கூடல்நகர், தூண்டில், வெள்ளித்திரை, மஞ்சள் வெயில், இரும்பு கோட்டை முரட்டுசிங்கம் நூற்றுக்கு நூறு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் நடிகை சந்தியா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சந்தியா சென்னையை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷீமா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.
கடந்த சிலவருடங்களுக்கு முன்பு நடிகை சந்தியா பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) எனப்படும் மன அழுத்த நோயால் பெரும் அவதிப்பட்டுள்ளார். மேலும் இதனால் இரண்டு மாதம் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை தொடர்ந்து கதறி அழுதுள்ளார். அவை சரியான நிலையில் அதுகுறித்து தனக்கு நேர்ந்த அனுபவம் மூலம் அனைத்து தாய்மார்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிகை சந்தியா தனது கணவருடன், பிக்பாஸ் புகழ் நடிகையான சுஜா வருணியை நேரில் சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருகின்றது.