மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தென்னிந்திய நடிகைகளில் காஜல் அகர்வாலுக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் பெருமை! உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பழனி திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
நடிகை காஜல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து நடிகை காஜல் தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு சினிமாத்துறையில் கொடிகட்டி பறக்கும் அழகிய சிலையான நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல மேடம் டுசார்ட்ஸ், சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் பிப்ரவரி 5ம் தேதி 2020 மெழுகு சிலை ஒன்று நிறுவப்பட உள்ளது. மேலும் இதற்கான அளவீடுகளை எடுக்கும் பணியில் தற்போது காஜல் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் அதுகுறித்து மிகவும் பெருமையுடன் தனது இன்ஸ்டாகிராமில்புகைப்படத்தை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.