குப்பையை போல என்னை தூக்கி எறிந்தாரா? தாறுமாறாக கேள்வியெழுப்பிய ரசிகர்! அதிரடி பதிலால் மூக்குடைத்த காஜல்!!



kajal-angrily-answered-to-netisan-question

 பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி,  மதுமிதா மற்றும் அபிராமி ஆகியோர் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். 

மேலும் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் வனிதா மீண்டும் விருந்தினராக வீட்டிற்குள் வந்து அனைவரையும் ஆட்டி வைக்கிறார்.

Sandy

இந்நிலையில் வீட்டிற்குள் போட்டியாளர்களும் ஒருவராக இருப்பவர் சாண்டி.  இவர் எப்பொழுதும் கலகலப்பாக இருக்ககூடியவர் மேலும் ஆடல், பாடல் என தன்னை சுற்றியிருக்கும் அனைவரையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளக்கூடியவர். 

இவரது முதல்மனைவி நடிகை காஜல் பசுபதி. காதல்திருமணம் செய்து கொண்ட இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டநிலையில், சாண்டி சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.

Sandy

 இந்நிலையில் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் காஜல் பிக்பாஸ் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் சாண்டி குறித்து யாராவது தவறாக பேசினால் அவர்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார். 

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர்,  அந்த கேடு கெட்டவன் உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான்..நீ அவனுக்கு கூஜா தூக்கிட்டு திரியுற " என கருத்து கூறியிருந்தார். 
அதனை கண்ட காஜல் ஆத்திரமடைந்து , அவர் என்னை தூக்கி எரிந்ததை நீ பாத்தியா.. உன் அளவுக்கு கீழே இறங்கி பதில் சொல்ல நான் விரும்பல, பரஸ்பர சம்மதம் என்று ஒன்று உள்ளது. மத்தவங்க லைஃப் பத்தி தெரியாமா எல்லாத்துக்கும் கதற வேண்டாம் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.