மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தள்ளி நில்றீ.. வயிறு எரியுது! விஜய்யின் அந்த புகைப்படத்தால் கடுப்பான பிக்பாஸ் பிரபலம்! ஏன்னு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. தளபதி 66 படத்தில் ஹீரோயினாக, விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து அண்மையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி, சரத்குமார், தமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அப்பொழுது விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவில் வைரலானது. இதனை கண்ட நடிகையும்,முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி, ராஷ்மிகா விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தள்ளி நில்றி’ என்று கமென்ட் செய்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர் ஒருவர் என்னாச்சு என கேட்டதற்கு அவர், வயிறு எரியுது’ என்று கூறியுள்ளார். மேலும் விஜய்யுடன் நீங்கள் எப்போது நடிப்பீர்கள்? என்ற கேள்விக்கு ’சாவதற்கு முன் ஒருமுறை நடித்துவிடுவேன்’ என பதிலளித்துள்ளார்.
Thalli Nildriii😡😡😡😕😤😤😤 pic.twitter.com/jXi4yaLP2k
— Kaajal Pasupathi (@kaajalActress) April 6, 2022