மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமலின் 233 வது படத்தின் தலைப்பு இதுதான்... படக்குழு அறிவிப்பு!!
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் கமல் அடுத்ததாக நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற சூப்பர் ஹூட் படங்களை இயக்கிய இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கமல், வினோத் கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கமலின் 233 வது படத்தின் தலைப்பு பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இப்படத்திற்கு தலைவன் இருக்கின்றான் என்று தலைப்பு வைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்கு ரசிகர்கள் சூப்பர் தலைப்பு என கமெண்ட் செய்து வருகின்றனர்.