50 வருஷத்திற்கு முன்பு நடிகர் கமல் இப்படியொரு கெட்டப்பில் நடித்துள்ளாரா! இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!



kamal-acted-in-jesus-role-before-50-years

 தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஏராளமான மாஸ் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் உலக நாயகன் கமல். இவருக்கென நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  இந்த நிலையில் கடைசியாக கமல் இந்தியன் 2, விக்ரம் திரைப்படத்தில் நடித்து வந்தார். 

நடிகர், பாடகர், நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்டு விளங்கிய கமல் தற்போது அரசியலில் களமிறங்கி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி அதனை வழி நடத்தி வருகிறார். மேலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தற்போது நடிகர் கமல் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

kamal

சினிமாவில் வித்தியாசமான பல கெட்டப்பிலும் நடித்த நடிகர் கமல் 50 வருடத்திற்கு முன்பு ஜீசஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக  தகவல்கள் பரவி வருகிறது. அதாவது 1971ஆம் ஆண்டு வெளிவந்த அன்னை வேளாங்கண்ணி எனும் படத்தில் கமல் ஜீசஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெமினி கணேசன், சிவகுமார் மற்றும் ஜெயலலிதா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.