கமல்ஹாசனின் அடுத்த அசத்தல்!. ஒட்டுமொத்த ரசிகர்களும் உற்சாகம்!.



kamalhasan next movie

பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்தததை தொடர்ந்து கமல் ஹாசன் தற்போது அரசியல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், அடுத்து அவருக்கு சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே அவரின் சபாஷ் நாயுடு படமும் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், தேவர் மகன் 2 படம் உருவாக இருப்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 அவர் சொன்ன சில நிமிடங்களில் இந்த செய்தி சமூகவலைதளங்களில் தீயாக பரவியது. தேவர்மகன் படம் கமலுக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேவர் மகன் 2 படம் தகவல் வெளியானதை அடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.