சர்காருக்காக மீண்டும் தமிழக அரசை கண்டித்த கமல்ஹாசன்!. குவிந்துவரும் ஆதரவுகள்!.



kamalhasan-talk-about-government-for-sarkar

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தீபாவளி அன்று வெளியானது சர்க்கார் திரைப்படம். 

சர்கார் படத்தின் போஸ்டர்கள் வெளியானதிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. விஜய் புகைபிடிப்பதை ஊக்குவிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் படங்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.

kamalhasan

இந்நிலையில் தீபாவளி அன்று வெளியான சர்க்கார் படம் ஆளும் கட்சியை மிகவும் விமர்சிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.  தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கினர்.

மேலும் சர்க்கார் படத்தில் படத்தின் வில்லியாக வரும் வரலக்ஷ்மி சரத்குமார் பெயர் கோமலவல்லி. இந்த பெயர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்தது. சர்க்கார் படத்தில் மிக்ஸி, க்ரைண்டர், மின்விசிறி  ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சிகள் நீக்கப்பட்டன.

kamalhasan

இன்று நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு, அரசையோ அரசின் திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என முருகதாஸ் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அரசை விமர்சித்ததற்காக முருகதாஸ் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்  தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்ட படத்தை வைத்து பாசிசம் செய்ய தமிழக அரசு ம் முயல்கிறது என கூறியுள்ளார்.



 

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சர்கார் திரைப்படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. கருத்துரிமையை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சிக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை.  ஏற்கனவே தமிழக அரசின் பாசிசம் முறியடிக்கப்பட்ட நிலையில்  அதை மீண்டும் முயற்சிக்கிறது. என பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவிற்கு, பலரும் ஆதரவு தரும் வங்கியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.