மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரோட்டுக்கு வந்தது நடிகர் விஜயின் குடும்ப தகராறு! செருப்பால் அடித்துக்கொண்டதால் பரபரப்பு!
பிரபல கன்னட நடிகர் துனியாவிஜய் என்பவருக்கு நாகரத்னா, கீர்த்திகவுடா ஆகிய இரண்டு மனைவிகள் உள்ளனர். துனியா விஜயின் முதல் மனைவி நாகரத்னா. அவர்களுக்கு மோனிகா, மோனிஷா, சாம்ராட் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். நடிகர் துனியா விஜய்க்கும், மனைவி நாகரத்னா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து நடிகர் துனியா விஜய் கடந்த 2016ம் ஆண்டு கீர்த்தி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நடிகர் துனியா விஜய் தன்னை தாக்கியதாக அவரின் மக்கள் மோனிகா கிரிநகர் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் துணிய விஜயின் இரண்டு மனைவிகள் ஒருவருக்கொருவர் செருப்பால் அடித்து கொண்டு தாக்கிய நிலையில் அந்த நடிகர் திடீரென தலைமறைவாகியுள்ளார்.
முதல்மனைவி நாகரத்னா தனது மகள்களுடன் தனியாக வசித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் கீர்த்தி கவுடா வீட்டிற்கு மகள்களுடன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் செருப்பால் தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து இருவரும் மாறி மாறி போலீசில் புகார் கொடுத்துள்ள நிலையில் துனியா விஜய் திடீரென தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.